
கோலாலம்பூர், நவ 18 – அரசியல் இயக்கமாக உரிமை உருவாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 30 ஆம்தேதி மாலை 3 மணி முதல் 5 மணிவரை சிலாங்கூர்
ஷா அலாம் IDCC மாநாட்டு மையத்தில் உரிமை மாநாடு நடைபெறவுள்ளது.
உரிமை நாள் 2025 என்ற கருப்பொருளில், நாடு
முழுவதிலும் இருந்து உரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் ஒன்று
கூடுவதுடன் , குரலற்றோரின் உரிமைக் குரலாக குறிப்பாக மலேசிய இந்திய சமுதாயத்தின் அரசியல் உரிமைக்கான உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உரிமையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் கட்சிகளின்
தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதோடு , இந்திய சமூகத்தின் பிரச்னைகளை நாட்டின் அரசியல் கூட்டணியிடம் வெளிப்படுத்தப்படும் என்பதோடு இந்தியர்களின் அரசியல் எதிர்காலத்திற்கான திசையை இம்மாநாட்டில் உரிமை வரவேற்கும் என பினாங்கு மாநிலத்தின் முன்ளாள் துணை முதலமைச்சருமான ராமசாமி குறிப்பிட்டார்.



