Latestமலேசியா

பத்துமலையில் 2025ஆம் ஆண்டுக்கான சமயம், பரதநாட்டியம், வயலின், வீணை & விசைப்பலகை இலவச வகுப்பு தொடக்கம்; உடனே பதியுங்கள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல், பத்துமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் கலாச்சார நிலையத்தில், டத்தோ சிவக்குமார் தலைமையிலான டி. எஸ். கே. குழுமத்தின் ஏற்பாட்டிலும், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஆதரவிலும் 2025ஆம் ஆண்டிற்கான புதிய இலவச இந்திய கலாச்சார வகுப்புகள் தொடங்கவுள்ளன.

ஆண்டுதோறும், இந்திய மாணவர்களின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்படும் இந்த வகுப்புகளில் கலந்து நன்மையடைந்த மாணவர்கள் பலர் இன்று நன்னிலையில் இருக்கின்றனர்.

அவ்வகையில், இளைய தலைமுறையினருக்கு நமது கலை கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வகையில் இவ்வாண்டும் தேவாரம் மற்றும் சமய வகுப்பு, பரதநாட்டியம், வயலின், வீணை மற்றும் விசைப்பலகை பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டும், வருங்கால சந்ததிகள் கலாச்சார பற்றுதலோடு வளர வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இலவச வகுப்புகளில் 7 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்தி கலாச்சார வகுப்புகளில் தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்பும் பெற்றோர்கள், திரையில் காணும் இணைப்பில் தங்களின் விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்து பதிந்துக் கொள்ளலாம்.

(https://registration.teamdsk.org/home/register),

அதே நேரத்தில் கூடுதல் தகவல்களுக்கு,
இந்த வகுப்புகளின் ஆசிதியர்களை உடனே தொடர்புக் கொள்ளுங்கள்.

thevaram.teamdsk@gmail.com
நவீன் (012-716 1575)
சீதா (011-2671 9946)
பூபாலன் (016-382 4090)

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!