
கோலாலம்பூர், பிப் 3 – பத்துமலை தாமான் ஸ்ரீ முன்னியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட லோரி ஓட்டுநர் ஒருவர் தனது இடது கையில் காயத்திற்கு உள்ளானார்.
தாமான் ஸ்ரீ முர்னியில் 58வது அடுக்கு மாடி குடியிருப்பில் இரவு 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக செந்துல் போலீஸ் தலைவர் ACP சுகர்னோ முகமட் ஷஹாரி ( Ahmad Sukarno Mohd Zahari ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 28 வயதுடைய நபரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரது கையில் பல முறை பாராங் கத்தியினால் வெட்டிய பிறகு அங்கிருந்து தப்பியோடினர்.
அந்த சந்தேகப் பேர்வழிகள் லோரி ஓட்டுநருக்கு தெரியாது என்பதோடு தனக்கு எவருடனும் முன் தகராறு எதுவும் இல்லையென்றும் அவர் கூறியிருப்பதாக விசாரணையில் தெரியவருகிறது.
இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவரின் காதலியும் அங்கு இருந்ததாகவும் , தாக்கியவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் சுகர்னோ குறிப்பிட்டார்.



