
ஹோலிவூட்டில் இன்று நடைபெற்ற 97-ஆவது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில், ‘Anora’ திரைப்படம் 5 விருதுகளைக் குவித்து மாபெரும் வெற்றிப் பெற்றது.
பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படமான ‘Anora’, முதன்மை விருதான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அசல் திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றது.
‘Anora’ படத்திற்காக சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 4 விருதுகளை வென்ற Sean Baker, இதன் வழி ஆஸ்கார் வரலாற்றில் ஒரே படத்துக்காக 4 விருதுகளை வென்ற முதல் நபராக சாதனைப் படைத்தார்.
இவ்வேளையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை “The Brutalist” படத்திற்காக Adrien Brody வாகை சூடினார்.
இது அவருக்கான இரண்டாவது ஆஸ்கார் விருதாகும்.
சிறந்த நடிகைக்கான விருதை ‘Anora’ படத்திற்காக Mikey Madison வென்றார்.
சிறந்த அனைத்துலகப் படமாக பிரேசில் நாட்டின் ‘I’m still here’ தேர்வானது.