Latestமலேசியா

பத்து பூத்தே விவகாரத்தில் வயது காரணமாக மகாதீர் மீது நடவடிக்கை இல்லை – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 22 – பத்து புத்தே விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் பங்கு தொடர்பில் அவரது வயது காரணமாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

அனைத்துலக ஆலோசகர்களின் கருத்துக்கள் இருந்தபோதிலும், 2018 ஆம் ஆண்டில் பத்து புத்தேவின் இறையாண்மை தொடர்பான மறு ஆய்வு விண்ணப்பங்களை நிறுத்த அமைச்சரவையில் செல்வாக்கு செலுத்துவதற்காக மகாதீர் வேண்டுமென்றே செயல்பட்டிருக்கலாம் என்று கடந்த ஆண்டு அரச விசாரணை ஆணையம் (RCI) கண்டறிந்தது.

மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 415(b) யின் கீழ் குற்றவியல் விசாரணை தொடங்கப்படலாம் என்று கூறி, மகாதிருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யும்படி அரச விசாரணை அணையம் பரிந்துரை செய்திருந்தது. அவர் தவறு செய்யவில்லையா?
அவர் தவறு செய்தார்,” என்று அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புக்கொள்ளவில்லை. 100 வயதுடைய முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்டதால் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம் என அன்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!