Latestமலேசியா

பத்து பூத்தே விவகாரம்: வயது மூப்பால் நடவடிக்கையிலிருந்து எனக்கு விலக்கா? தேவையில்லை என்கிறார் மகாதீர்

கோலாலாம்பூர், ஜூலை-23- வயது மூப்பைக் காரணம் காட்டி, பத்து பூத்தே விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதிலிருந்து தமக்கு விலக்களிக்க வேண்டிய அவசியமில்லை என, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் கூறியுள்ளார்.

100 வயதாகி விட்ட மகாதீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென அமைச்சரவை முடிவுச் செய்ததாக, நேற்று மக்களவையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது X தளப் பதிவில் மகாதீர் இன்று அதனைத் தெரிவித்தார்.

“என்னை குற்றவாளி என ‘தீர்ப்பளித்தவர்’ அன்வார். எனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று கூறியவரும் அன்வார் தான்”

“ஆனால், நான் நிரபராதி என்பது எனக்குத் தெரியும்; அதை நான் நீதிமன்றத்தில் நிரூபிக்க விரும்புகிறேன். எனவே என்னை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுங்கள்” என மகாதீர் சொன்னார்.

“தவறு செய்தவர்களும், பயப்படுபவர்களும் தான் நீதிமன்றம் செல்ல தயங்க வேண்டும்; நான் ஏன் பயப்பட வேண்டும்” என, அந்த பெருந்தலைவர் கேள்வி எழுப்பினார்.

பத்து பூத்தே இறையாண்மை விஷயத்தில் 2018-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யும் முடிவை மலேசியா வாபஸ் வாங்கியதில், அமைச்சரவையை மகாதீர் தவறாக வழிநடத்தியதாக கடந்தாண்டு அரச விசாரணை ஆணையம் அறிவித்திருந்தது.

மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்து, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவரை விசாரிக்கவும் அவ்வாணையம் பரிந்துரைத்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!