Latestமலேசியா

பத்து மலைக்கு மேலுமொரு சிறப்பு; அழகிய அருங்காட்சியகம் திறப்பு

பத்து மலைக்கு மேலுமொரு சிறப்பு; அழகிய அருங்காட்சியகம் திறப்பு

பத்து மலை, பிப்ரவரி-8,

பத்து மலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அழகிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புதிய மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அந்த கண்கவர் அருங்காட்சியகத்தை, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ நடராஜா நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

பத்து மலையின் வரலாறு, வளர்ச்சி, வசதிக் கட்டமைப்பு, நிர்வாகம், சிறப்புகள் என அனைத்தையும் திரை வடிவிலான இந்த அருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ளது.

Grasp Software Solutions Sdn Bhd மேம்படுத்தியுள்ள இந்த அருங்காட்சியகம், தமக்கு பழைய நினைவலைகளைக் கண்முன் கொண்டு வந்ததாக தான் ஸ்ரீ நடராஜா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

இந்த சமய அருங்காட்சியத்தை அமைக்கும் சவால் மற்றும் அது அமைந்த விதம் குறித்து Grasp Software Solutions நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Dr கோவிந்தராஜ் செல்வம் விளக்கினார்.

 

சிறார்களுக்கு 9 வெள்ளியும் பெரியவர்களுக்கு 13 வெள்ளியும் நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படுகிறது.

5 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இலவசம் என கோவிந்தராஜ் சொன்னார்.

இதனிடையே, பத்து மலையில் இன்னும் இரண்டு மூன்று பெரிய மேம்பாட்டுத் திட்டங்களே எஞ்சியுள்ளன;
அவற்றை நிறைவேற்றுவதே தமது கனவு எனக் கூறிய நடராஜா, நடப்பிலுள்ள பல்நோக்கு மண்டபத்தை உடைக்கும் வேலைகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவிருப்பதாக சொன்னார்.

அடுத்து பத்து மலையில் நூல் நிலையத்தைத் திறக்கும் திட்டம் இருப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

 

தைப்பூசக் காலத்தில் வியாபாரம் செய்ய கடை ஒதுக்கப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் சில தரப்பினர் பரப்பும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நடராஜா கருத்துரைத்தார்.

இவ்வேளையில், விரைவிலேயே பத்து மலையில் மாபெரும் ஒரு நாள் சமய மாநாடு நடத்தப்படவுள்ளது.

நாடளாவிய நிலையில் அரசியல் தலைவர்கள், இந்து அமைப்புகள் ஆகியோர் அதில் பங்கேற்க அழைக்கப்படுவர் என நடராஜா சொன்னார்.

 

பத்து மலை வெறும் முருகன் திருத்தலமாக இல்லாமல், சமய- சமூக- கலாச்சார- பண்பாட்டு வளர்ப்பு மையமாகவும் நாளுக்கு நாள் உருமாற்றம் கண்டு வருவது பாராட்டுதலைப் பெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!