
கோம்பாக், டிசம்பர்-18 – ஞாயிறன்று பத்து மலை, Amara Residensi குடியிருப்பில் ஓர் ஆடவர் பாராங் கத்தியால் வெட்டப்பட்ட வைரல் சம்பவம் தொடர்பில், 8 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
அதில், 20 வயது இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், அன்றிரவே நால்வரைக் கைதுச் செய்ததாக கோம்பாக் போலீஸ் கூறியது.
அவர்கள் டிசம்பர் 21 வரை விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், 21 முதல் 33 வயதிலான மேலும் 4 பேர் கைதாகி, டிசம்பர் 22 வரை தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆயுதத்தால் கடுமையான காயங்கள் விளைவித்தது தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறிய போலீஸ், தகவல் தெரிந்த பொது மக்கள் அதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டது.



