மலேசியா

பத்து மலையில் புதிய பல்நோக்கு மண்டபம் திறப்பு; 1,500 பேருக்கான வசதி

பத்து மலை, பிப்ரவரி-21,

பத்து மலையில் 1,500 பேர் அமரும் வசதியுடன் கூடிய புதிய பல்நோக்கு மண்டபம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா அதனைத் திறந்து வைத்தார்.

பத்து மலை வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள இந்த மண்டபம் மேடை, LED திரை மற்றும் விசாலமான இருக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

3-4 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு இது பெரிய மண்டபமாகும்.

திருமண விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சமூகச் சந்திப்புகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடிய இந்த மண்டபம், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

பத்து மலை, ஆன்மீகத் தலமாக மட்டுமல்லாமல், கலாச்சாரமும் சமூகமும் இணையும் உயிரோட்டமான மையமாகவும் தொடர்ந்து வளர்ந்து வருவதாக, திறப்பு விழாவுக்குப் பிறகு தான் ஸ்ரீ நடராஜா பெருமிதம் தெரிவித்தார்.

இந்த புதிய பல்நோக்கு மண்டபம் பத்து மலையின் சிறப்புகளுக்கு மேலும் மெருகூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி குடும்ப நிகழ்வுகளையும் வைபவங்களையும் ஒரு தெய்வீகச் சூழலில் பிரமாண்டமாக நடத்திட இந்த பல்நோக்கு மண்டபம் நமக்கு வாய்ப்பாக அமைகிறது.

மண்டப முன்பதிவுக்கு பொது மக்கள் தேவஸ்தான அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!