Latestமலேசியா

பத்து மலை – பூலாவ் செபாங் இரயில் சேவை மீண்டும் வழக்கத்திற்குத் திரும்பியது

கோலாலம்பூர், மார்ச்-27-பத்து மலை முதல் பூலாவ் செபாங் வரையிலான ETS மற்றும் KTM கம்யூட்டர் இரயில் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்கே திரும்பியுள்ளன.

KTMB நிறுவனம் அதனை உறுதிப்படுத்தியது.

இதற்கு முன் ஏற்பட்ட சேவைத் தடையானது, Batang Benar மற்றும் Labu நிலையங்களுக்கு இடையில் மேல்தள மின்கம்பி சேதமடைந்ததால் ஏற்பட்டது.

அவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நேற்று அதிகாலை நிறைவடைந்ததாக KTMB கூறியது.

இந்தச் சேவை தடையின் போது, பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிச் செய்ய மாற்று பேருந்து சேவைகள் மற்றும் உதவி பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் தங்களது இலக்கை பாதுகாப்பாக சென்றடைந்தனர்.

தற்போது அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!