
ஷா ஆலாம், மார்ச்-11-சிலாங்கூர், பந்திங்கில் வழித்தவறி பாதை கேட்பது போல் பாசாங்கு செய்த இரு கொள்ளையர்கள், ஒரு குத்தகையாளரிடமிருந்து Toyota Hilux நான்கு சக்கர வாகனத்தையும், RM9,500 ரொக்கத்தையும் திருடிக் கொண்டு ஓடினர்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 50 வயது குத்தகையாளரை சந்தேத நபர்கள் நெருங்கினர்.
வழித்தவறி விட்டதாக ஒருவன் பேசிக் கொண்டிருக்கும் போது, இன்னொருவன் பாராங் கத்தியை நீட்டி, பாதிக்கப்பட்ட ஆடவரரின் கைகளையும் கால்களையு கட்டிப் போட்டான்.
குத்தகையாளரின் முகத்திலும் அவர்கள் எட்டி உதைக்க, அவரின் உதடு கிழிந்துபோனது.
பின்னர், அவ்வாடவருக்குச் சொந்தமான கைப்பேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துகொண்டு கொள்ளையர்கள் கம்பி நீட்டினர்.
பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார் செய்த நிலையில், திருடுபோன வாகனம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக Jalan Prima Puchong சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கொள்ளையர்களைப் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.



