
கோலாலம்பூர், ஏப் 14 – பன்முகத் தன்மைத்தான் மலேசியர்களின் பலம். அந்த சிந்தனையோடு இன்று சித்திரை புத்தாண்டு, விஷூ, வைசாகி, உகாதி ஆகிய புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை எம்.ஐ.பி.பி எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் நேசனல் துணைத் தலைவருமான S.P புனிதன் தெரிவித்துக் கொண்டார்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளி மற்றும் சீக்கிய சமூகத்தினர் கொண்டாடினாலும் அனைவரும் பொதுவான மனப்பான்மையால் ஒன்றுபட்டுள்ளன. இந்த பண்டிகை காலம் நமது பன்முகத்தன்மையின் பலம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நமது மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நமது கனவுகள் ஒறுத்தான்.
நமது குடும்பங்களை மேம்படுத்துவது, பாரம்பரியத்தை மதிப்பது, ஒன்றுமையை வலுப்படுத்தி அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் எதிர்ப்பார்ப்புத்தான் புத்தாண்டாகும்.
எனவே , நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய சமூகங்களுக்கும் சீக்கிய நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான, வளமான மற்றும் அர்த்தமுள்ள புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவருக்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியுடன் ஆசீர்வதிக்கட்டும் என புனிதன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.