Latestமலேசியா

பன்றி முடி தூரிகை பயன்படுத்தியதால் மலாக்கா தொழிற்சாலையின் ஹலால் சான்றிதழ் இரத்து

மலாக்கா, ஏப்ரல்-2,-மலாக்காவில் உள்ள ஒரு காப்பி மற்றும் பிஸ்கட் தயாரிப்பு தொழிற்சாலை, பன்றி உரோமத்தால் செய்யப்பட்ட தூரிகையை பயன்படுத்தி இயந்திரங்களை சுத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் ஹலால் சான்றிதழ் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மாநில இஸ்லாமிய சமய மன்றமான JAIM அதிகாரிகள், ஆய்வுக்குப் பின்னர் அதனை உறுதிப்படுத்தினர்.

தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட தூரிகை ஹலால் தரநிர்ணயத்திற்கு எதிரானது என்பதோடு, உணவுத் தயாரிப்பு உபகரணங்களின் தூய்மையைப் பாதிக்கும் வகையிலும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொழிற்சாலையின் ஹலால் சான்றிதழ் அதிரடியாக இரத்தாகியுள்ளது.

அந்த தொழிற்சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது.

என்றாலும் விலங்குகளின் உரோமங்களால் ஆன தூரிகை பயன்பாடு தவறு என்பது தொழிலாளர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் இது ஏற்றுக் கொள்ள முடியாத சாக்குபோக்கு எனக் கூறிய அதிகாரிகள், ஹலால் விதிமுறைகளை மீறும் எந்த நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இந்நிலையில், பொது மக்களும் உணவுப் பொருட்களை வாங்கும் முன் அவற்றின் ஹலால் தகுதியை சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!