பயணப் பெட்டியின் மூலம் வனவிலங்குகளை இந்தியாவுக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு

கோலாலம்பூர், செப் -29,
செப்பாங்கிலுள்ள , கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் கிப்பன் எனப்படும் நீண்ட கைகளைக் கொண்ட ஒருவகை குரங்கு உட்பட மேலும் இரண்டு Cuscus வனவிலங்குகளை தனது பயணப் பெட்டியின் மூலம் இந்தியாவுக்கு கடத்த முயன்ற 46 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு 8.30 மணிக்கு மலேசியாவைச் சேர்ந்த அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக AKPS எனப்படும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
AKPS, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான (PERHILITAN) மற்றும் KLIA உதவி போலீஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு 20, 000 ரிங்கிட் மதிப்புள்ள அந்த வனவிலங்குகளை கடத்தும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. அந்த ஆடவர் மலேசிய ஏர்லைன்ஸ் MH0194 விமானத்தின் மூலம் மும்பைக்கு வனவிலங்குகளை கடத்த முயன்றதாக கூறப்பட்டது.