Latestமலேசியா

பயணிகளுக்கு 610 கோடி ரூபாயை திருப்பி செலுத்திய IndiGo விமான நிறுவனம்

நியூ டெல்லி, டிசம்பர் 8 – சமீபத்தில் ரத்தான விமான சேவைகளுக்கு பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட 610 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணங்களை ‘IndiGo’ நிறுவனம் அவர்களிடம் திரும்ப தந்துள்ளது.

திடீரென ரத்து செய்யப்பட்ட IndiGo நிறுவனத்தின் விமான சேவைகளால் பயணிகள் பெரும் பாதிப்புகளுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆளாகியிருந்தனர். ஆனால் விமான நிறுவனம் வழங்கிய இந்தத் தொகை அவர்களுக்கு சிறிதளவாவது திருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில், மொத்தம் 138 வழித்தடங்களில், IndiGo நிறுவனம் 135 வழித்தடங்களில் விமான சேவையை முழுமையாகத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், விமான நிலையங்களில் குவிந்திருந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் பைகள், மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் புகார்களைப் பரிசீலித்த விமான நிறுவனம், அவர்களின் பணத்தை திரும்ப வழங்குதல், பயணிகளின் பைகளை ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகளைச் சிறப்பு குழுவினரின் உதவியுடன் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!