Latestமலேசியா

பரபரப்பான சாலையில் திடீரென ஓடிய சிறுவன்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கோலாலம்பூர், ஜனவரி-17 – சிறுவன் ஒருவன் பரபரப்பான சாலையில் திடீரென ஓடிச் செல்லும் காட்சிகள் அடங்கிய dash cam வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி மலேசியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

33 வினாடிகள் கொண்ட அவ்வீடியோவில், அப்பையனைத் துரத்திச் சென்ற பெண், எதிரே வரும் வாகனத்தைத் தவிர்க்கும் முயற்சியில் வழுக்கி விழுகிறார்.

அச்சிறுவனோ, அவன் பாட்டுக்கு சாலை நடுவே சிரித்துக் கொண்டே ஓடுகிறான்.

அதே சமயம், சாலையோரமாக மற்றோர் ஆடவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்து, இன்னொரு குழந்தை ஓடிச் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறார்.

இச்சம்பவம் எங்கு நடந்தது என சரியாகத் தெரியவில்லை; ஆனால் சில வலைத்தளவாசிகள் ஜோகூர் பாரு என குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் பாதுகாப்பான இறக்குமிடங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக சத்தத்துக்கு உணர்வுள்ள சிறப்பு தேவையுடைய குழந்தைகள் அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் பலர் வலியுறுத்துகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!