
செப்பாங், ஆகஸ்ட்-16 – கணினி செயல்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 18 தொடங்கி 2 வாரங்களுக்கு KLIA Aerotrain இரவு நேர பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
பயணிகளின் பாதிப்பைக் குறைக்கும் வகையில் உச்ச நேரங்களில் அல்லாமல், நள்ளிரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என, Malaysia Airports அறிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், Aerotrain சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது; என்றாலும் பிரதான முனையக் கட்டிடத்திற்கும் செயற்கைக்கோள் கட்டிடத்திற்கும் இடையில் தடையற்ற இணைப்பை உறுதிச் செய்ய, விமானப் பேருந்துகள் வழங்கப்படும்.
பயணிகளும், விமான நிலைய அறிவிப்புப் பலகைகளைப் பார்த்தோ அல்லது அதிகாரிகளிடம் கேட்டோ மேல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
முழுமையான செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதிச் செய்வதற்கு இந்த திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் அவசியம் என Malaysia Airports கூறியது.
செயல்படத் தொடங்கியதிலிருந்து, Aerotrain இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது; 18,800 பயணங்களையும் அது நிறைவுச் செய்துள்ளது.