
சிரம்பான், டிசம்பர்-12 – நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிலில் விடப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை திடீரென மரணமடைந்துள்ளது.
திங்கட்கிழமை மாலை குழந்தையை அழைத்து வர சென்ற போது, அது சுயநினைவின்றி கிடந்தது கண்டு தாய் பதற்றமடைந்தார்.
குழந்தையை அவர் உடனடியாக தனியார் கிளினிக் கொண்டுச் சென்ற நிலையில், CPR முதலுதவிகள் வழங்கப்பட்டன.
ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
அக்குழந்தை கடந்த 5 மாதங்களாக அப்பராமரிப்பாளரிடம் விடப்பட்டதும், சம்பவத்திற்கு முன் அதன் உடல்நிலை சற்று பலவீனமாகவே இருந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக சிரம்பான் போலீஸ் கூறியது.
ரெம்பாவ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில், குழந்தையின் வயிற்றுப் பகுதியில் காயமிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பாளரான 32 வயது பெண் கைதானார்.
வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்ட பிறகு போலீஸ் உத்தரவாதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.



