
நியூ ஜேர்சி, மார்ச்-2 – அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தில் உள்ள Newark-கிலிருந்து Indianapolis நகருக்குப் புறப்பட்ட FedEx சரக்கு விமானத்தை பறவை மோதியதால், அதன் ஓர் இயந்திரம் தீப்பற்றியது.
விமானத்தின் இயந்திரம் நடுவானில் தீப் பற்றி எரியும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பறவையுடன் மோதியதால் இயந்திரத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பிடித்த போதும், விமான ஊழியர்கள் திறமையாக செயல்பட்டு அவசர தரையிறக்கம் செய்தனர்.
தரையிறங்கிய போது, விமானத்தின் வலப்பக்க இறக்கையிலிருந்து இயந்திரம் கழன்றி விழுந்ததாகவும், விமான நிலைய ஊழியர்கள் விரைந்து நிலைமையைச் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது அந்த சரக்கு விமானத்தில் மூவர் இருந்துள்ளனர்.
நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எரிபொருள் முடியும் வரை , ஓர் இயந்திரத்தை கொண்டே பறக்கும் ஆற்றலை போயிங் விமானங்கள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.