Latestமலேசியா

பள்ளி பேருந்து கட்டணங்கள் உயரக்கூடும்- மலேசிய பள்ளி பேருந்து சங்கம்

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 9 – காப்பீடு, ஊதியம் மற்றும் வாகன பாகங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு செலவுகள் உயர்ந்துள்ளதால், பள்ளி பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மலேசிய பள்ளி பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் Amali Munif Rahmat கூறுகையில், 2015 முதல் பேருந்து கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதில்லை; எனவே கட்டணத்தை உயர்த்தலாமா என்பது முழுமையாக பள்ளி பேருந்து உரிமையாளர்களின் முடிவாகும் என்றார். தற்போது வாகன காப்பீடு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வாகன பாகங்களின் இறக்குமதி செலவுகள் உயர்ந்துள்ளன.

சங்கத்திற்கு கட்டண உயர்வைத் தடுக்க அதிகாரம் இல்லை என்றும், நஷ்டம் ஏற்பட்டால் சேவையை தொடர கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறினார். சில பேருந்து உரிமையாளர்கள் இதுவரை கட்டணங்களை மாற்றாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி ஆண்டு, சில மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமையும், மற்ற மாநிலங்களில் திங்கட்கிழமையும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!