
பெக்கான், ஜனவரி-11 – பஹாங், பெக்கானில் நேற்று காலை, பாதி சிதைவடைந்த மனித உடல் ஒன்று Pantai Lagenda கடற்கரையில் கரையொதுங்கியது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதியாகவில்லை.
மரணத்திற்கானக் காரணத்தை கண்டறிய, நிபுணர்கள் தற்போது பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
உடல் பாதி அழுகிப் போயிருந்தாலும் இடுப்புக் பகுதியில் பச்சைக் குத்து அடையாளம் காணப்பட்டது.
இதுவே விசாரணைக்கு முக்கியமாக இருக்கும் என போலீஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள் உள்ளவர்கள், போலீஸை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



