
பஹாங், ஜனவரி 2 – பஹாங் Kampung Tanjung, Nenasi-யில் இருக்கும் கடற்கரை பகுதியில், விண்வெளியிலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு பெரிய பொருள் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மலேசிய விண்வெளி நிறுவனம் மற்றும் அணு ஆற்றல் துறையான MOSTI அப்பொருள் தொடர்பான ஆய்வை நடத்தியது. அதன் அடிப்படையில் அந்தத் துண்டு கடலில் விழுந்து, அலைகளால் கரைக்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
4.26 மீட்டர் நீளமும், சுமார் 500 கிலோ எடையும் கொண்ட இந்த பொருளில் கடல் உயிரினங்கள் ஒட்டியிருந்தன. சோதனையில் கதிர்வீச்சு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்புக்காக அப்பொருள் Nenasi காவல் நிலையத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. அதே என்றதில் மேல் ஆய்வுகள் தொடரும் நிலையில், இதுபோன்ற பொருட்களை கண்டால் உடனே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



