
கோலாலாம்பூர், அக்டோபர்-1,
சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அனுபவம் குறைவாக இருப்பதால், பல சிறு தொழில் வியாபாரிகள் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
அதனை உணர்ந்து, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக VBoom என்ற புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு TikTok Shop தளம் மட்டுமல்ல…மாறாக, நேரடி ஒளிபரப்புக்கான சிறப்பு ஸ்டுடியோவும், அனுபவம் வாய்ந்த மார்க்கெட்டிங் நிபுணர்களின் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
தீபாவளி நெருங்கும் இந்நேரத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி VBoom அறிமுகம் காண்பது மற்றொரு சிறப்பு.
இது, விற்பனையை திட்டமிட்டும் பயனுள்ள வகையிலும் அதிகரிக்க சிறு தொழில் வியாபாரிகளுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
எனவே, தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புவோர், VBoom-னை DM எனப்படும் நேரடிச் செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
வியாபாரிகளுக்கு யுக்திகளைக் கற்றுக் கொடுப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கும் நன்மைப் பயக்கும் ஒரு வர்த்தகத் தளமாகவும் VBoom வலம் வரவுள்ளது.
குறிப்பாக பொருட்களை விளம்பரப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க பல்வேறு தேர்வுகளை இத்தளம் வழங்குகிறது.
அக்டோபர் 6 முதல் தினமும் நண்பகல் 12 மணிக்கு உங்களுக்காக சிறப்பு நேரலை இடம்பெறும்; அதில் ஏராளமான பொருட்கள் குறித்த தகவல்களும், சிறப்புக் கழிவுச் சலுகைள் குறித்தும் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
டிஜிட்டல் உலகில் இன்னும் அனுபவம் இல்லாதவர்களுக்கு வழிகாட்டும் அதே வேளையில், அறிவு சார்ந்த வணிக உலகத்தை ஒன்றாக உருவாக்குவோம்.