பாசிர் கூடாங்கில் சாலை விபத்து; 19 வயது இளைஞர் உயிரிழப்பு

பாசிர் கூடாங், அக்டோபர் 3 – நேற்று காலை மாசாய் கோங் கோங் ஜாலான் பெத்திக் (Jalan Masai Kong Kong- Jalan Betik 1) சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர், பேருந்தின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
19 வயது மதிக்கத்தக்க இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று செரி அலாம் (Seri Alam) மாவட்ட போலீஸ் தலைவர், முகமட் சுஹைமி இஷாக் (Mohd Sohaimi Ishak) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளில் மாசாய் சாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது வலப்புறமாக வந்த வேன் ஒன்று திடீரென சாலையில் நுழைந்தது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
வேறு வழியின்றி வேனின் முன்பகுதியை மோதி கீழே விழுந்த அந்த இளைஞர் பின்பு எதிர்திசையிலிருந்து வந்த பேருந்தின் கீழ் சிக்கி கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகமட் சுஹைமி மேலும் கூறுகையில், 54 வயதான வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.