
பாசீர் மாஸ், மே-2, கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் பங்கோல் சே டோலில் ஓர் ஆசிரியரான தந்தை கத்தியால் குத்தியதில், 11 வயது மகன் காயமடைந்தான்.
அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அச்சம்பவத்தை, பாசீர் பாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் காமா அசுரால் மொஹமட் உறுதிப்படுத்தினார்.
தொடக்கக் கட்ட தகவலின் படி, சிறுவனின் நெஞ்சுப் பகுதியில் கத்திக் குத்து பட்டதாக அசுரால் சொன்னார்.
எனினும், அச்சம்பவத்திற்கான காரணம் குறித்து அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது கோத்தா பாரு ராஜா பெரம்புவான் சைனாப் டுவா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
விசாரணைகள் நடைபெற்று வருவதால், எந்தவொரு தரப்பும் தேவையற்ற யூகங்களை எழுப்ப வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்