Latestமலேசியா

பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் மலையேறிய 92 பேர் கைது

ஷா ஆலாம், மார்ச்-30-சிலாங்கூர், கோம்பாக்கில் உள்ள Ulu Gombak Tambahan பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் மலை ஏறியதற்காக, 92 மலையேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர்.

நேற்று காலை சிலாங்கூர் மாநில காட்டு இலாகாவான JPNS நடத்திய அமுலாக்க சோதனையில் அவர்கள் கைதாகி, போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டனர்.

அரசு சார்பற்ற நிறுவனமொன்று நடத்திய மலையேறும் நடவடிக்கையில் அவர்கள் பங்கேற்றதாக அறியப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் எந்தவொரு செயல்பாடும் அதிகாரப்பூர்வ அனுமதி பெறாமல் நடத்தப்படக் கூடாது என்பது விதிமுறையாகும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

எனவே, மலையேறிகளும், அந்நடவடிக்கையை ஏற்பாடு செய்வோரும், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு முன் தங்களிடம் அனுமதிப் பெற்றாக வேண்டுமென JPNS கூறியது.

பெர்மிட் இல்லாமல் செயல்படும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!