
வூல்ஸ்பெர்க் (ஜெர்மனி), ஜனவரி-17. – தற்கால நவீனக் கார்கள் அனைத்தும் touchscreen எனப்படும் தொடுதிரை இயக்கத்திற்கு மாறியுள்ள நிலையில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் பட்டன்கள் மற்றும் knob-களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஜெர்மனியின் Volkswagen நிறுவனம் தொடங்கியதை, Hyundai, Mercedes Benz, Porsche போன்ற மற்ற முன்னணி நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன.
ஓட்டுநர் பாதுகாப்பே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
Touchscreen-னை பயன்படுத்தும் போது சாலையிலிருந்து கவனம் சிதறும் அபாயம் அதிகரிப்பதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, குளிரூட்டி, ஒலி கட்டுப்பாடு போன்ற அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களுக்கு திரைத் தேடல் அவசியமாக இருப்பது, பல ஓட்டுநர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தவிர, ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பான Euro NCAP, முக்கிய செயல்பாடுகளுக்கு காருக்குள் பட்டன்கள் இருந்தால் உயர் பாதுகாப்பு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, இனி கார்கள் touchscreen மற்றும் பட்டன் இணைந்த கலப்பு வடிவமைப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



