Latestமலேசியா

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மை கார்ட், கடப்பிதழ் இவ்வாண்டு மத்தியில் அறிமுகம்

புத்ரா ஜெயா, ஜன 8 – தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் போலியாக உருவாக்குவதைத் தடுக்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய MyKad மற்றும் கடப்பிதழை தேசிய பதிவுத்துறை அறிமுகப்படுத்தும்.

புதிய MyKad-ன் அறிமுகம் தற்போதைய பாதுகாப்புத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.

மக்களின் அடையாள ஆவணங்களின் நேர்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, இந்த புதிய பாதுகாப்பு ஆவணத்தை வழங்க வேண்டிய காலம் கடந்துவிட்டதால் பாதுகாப்பு ஆவணங்களின் நேர்மையை அதிகரிக்க கூடுதல் உத்தரவாதமான பாதுகாப்பு அம்சங்கள் தேவையென இன்று சைபுடின் கூறினார்.

அதோடு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய கடப்பிதழ் அறிமுகப்படுத்தப்டவுள்ளது.

ஏற்கனவே உள்ள கடப்பிதழ் செல்லுபடியாகும் காலம் அதன் வரம்பை அடைந்த பிறகு புதிய கடப்பிதழ் அறிமுகப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பு ஆவணங்களை மாற்ற வேண்டியிருந்தது.

விசா இல்லாத பயணத்தின் அடிப்படையில் உலகின் சிறந்த கடப்பிதழ்களில் ஒன்றாக இருக்கும் மலேசிய கடப்பிதழின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இந்த நடவடிக்கை முக்கியமானது என்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் சைபுடின் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!