
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-17- பினாங்கு, பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் முன்னாள் தலைவர், தன் பராமரிப்பில் இருந்த பதின்ம வயது பெண் பிள்ளையைத் தவறாக தொட்ட வழக்கில் குற்றவாளியே என, பாலேக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அச்சம்பவம் 2023 பிப்ரவரி 19-ஆம் தேதி கம்போங் சுங்கை நிபோங்கில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நிகழ்ந்தது.
அப்போது பாதிக்கப்பட்டவருக்கு வெறும் 16 வயது மட்டுமே.
குற்றம் சாட்டப்பட்ட 48 வயது நபர் தனது பதவியையும் நம்பிக்கையையும் தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
இதையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 பிரம்படிகளையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு முடியும் வரை தண்டனை அமுலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.



