கோலாலம்பூர், ஜன 20 –
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பாயோங் ரஹ்மா (Payung Rahmah) கோட்பாட்டின் கீழ் Servis Ihsan MADANI@ Petronas AutoExpert (SIM@PAX) கார் பராமரிப்பு சேவையை அறிமுகப்படுத்தும் என அதன் அமைச்சர் டத்தோ அர்மிஷான் முகமட் அலி (Datuk Armizan Mohd Ali) தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கை செலவினத்தை சமாளிப்பதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். வாகனப் பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக PETRONAS உடன் இணைந்து SIM@PAX ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக் உட்பட நாடு முழுவதும் உள்ள 130 PETRONAS AutoExpert பட்டறைகளில் இந்த திட்டத்தின் மூலம் கார் பராமரிப்பு திட்டங்களை வழங்குகிறது.
ஜனவரி 24ஆம் தேதி முதல் 28 ஆம்தேதிவரை சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் SIM@PAX திட்டம் 95 பெட்ரோனாஸ் Auto Expert பட்டறை மையங்களில் தொடங்கும் என இன்று செய்தியாளர்களிடம் அர்மிசான் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணையமைச்சர் டத்தோ பவ்சியா சாலேவும்(Datuk Fuziah Salleh) கலந்து கொண்டார். SIM@PAX திட்டம் ஹரிராயா, தீபாவளி, கிறிஸ்துமஸ் , Kaamatan , Gawai மற்றும் தேசிய தின கொண்டாட்டத்திலும் அமல்படுத்தப்படும் .