இனி விழாக் காலத்தில் டோல் கட்டணம் விலக்களிக்கப்படாது – நந்தா லிங்கி

கிள்ளான், ஜன 21 – இவ்வாண்டு முதல் விழாக் காலங்களில் டோல் கட்டணங்களில் விலக்களிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக கூடுதலான இலக்கிடப்பட்ட அணுகுமுறை பயன்படுத்தப்படும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பொதுப் பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸன்டர் நந்தா லிங்கி ( Alexander Nanta Linggi) தெரிவித்தார்.
இலக்கிடப்பட்ட உதவித் தொகை அமல்படுத்தப்படும் முன்னடிவடிக்கைக்கு ஏற்ப அரசாங்கத்தின் இந்த முடிவு அமைவதாக அவர் கூறினார்.
இனி டோல் கட்டணம் இலவசம் இல்லையென்பது அமைச்சரவை முடிவு செய்துள்ளதால் அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் டோல் கட்டணம் விலக்களிக்கப்படவில்லை என்பதையும் Alexander Nanta Linggi சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் இந்த விவகாரத்தில் இதர பரிசீலனைகள் இருக்குமானால் பின்னர் அறிவிக்கப்படும்.