Latestமலேசியா

“பார்வையின் மொழி”:குற்றம் குறையில்லா காதலைச் சொல்ல வரும் உள்ளூர் தமிழ் சினிமாவின் அடுத்த வரவு

கோலாலம்பூர், ஏப்ரல்-9 பார்வையற்ற ஆணுக்கும் பேச முடியாத பெண்ணுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான காதலைச் சொல்ல வருகிறது, உள்ளூர் தமிழ் சினிமாவின் அடுத்த வரவான “பார்வையின் மொழி” திரைப்படம்.

சந்தோஷ் கேசவன் இயக்கத்தில் அருண்குமார் கதாநாயகனாகவும், ரூபிணி கிருஷ்ணன் கதாநாயகியாகவும் இதில் நடித்துள்ளனர்.

பார்வையில்லா காதலனும், பேச்சுத் திறனற்ற காதலியும் காதலிக்கும் மொழியே படத்தின் மூலக் கதை.

அவர்களுக்குள் உருவாகும் புரிந்துணர்வு, பிரச்னைகளைத் தீர்க்கும் விதம், பெற்றோர்களின் ஏற்பு என இயல்பான வாழ்வியல் அம்சங்களை உங்களுக்காகத் தருகிறது “பார்வையின் மொழி”.

படத்திற்கு இன்னொரு முக்கியத் தூணை இசையமைப்பாளர் ஜேவின் இசை.

இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று GSC Midvalley திரையரங்கில் நடைபெற்றது.

பிரமுகர்களுடன் , உள்ளூர் கலைஞர்கள், ஊடக நண்பர்கள் என திரளானார் அதில் பங்கேற்று தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர்.

ஏப்ரல் 17-ஆம் தேதி திரைக்கு வரும் இந்த “பார்வையின் மொழி” மலேசியத் தமிழ்ப் படைப்புக்கு உள்ளுர் இரசிகர்கள் வற்றாத ஆதரவை வழங்குவார்கள் என படக்குழு எதிர்பார்க்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!