Latestமலேசியா

பாலிங்கில் தொலை தொடர்பு கம்பிகளை திருட்டு; தப்பிச் செல்கையில் வீட்டை மோதி வாகனம் கவிழ்ந்தது

மார்ச்-9-கெடா பாலிங்கில் உள்ள கம்போங் பாரிட் பஞ்சாங்கில் ( Kampung Parit Panjang), தொலை தொடர்பு கம்பிகளை திருடிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு சக்கர வாகனத்தை போலீஸ் ரோந்துக் கார் துரத்திச் சென்றபோது அந்த வாகனம் கவிழ்ந்து ஒரு வீட்டில் மோதியதைத் தொடர்ந்து அதில் இருந்த இருவர் தப்பிச் சென்றனர்.

கம்போங் Star kecilலில் நேற்று முன்தினம் இரவு 9.52 மணியளவில் தொலைத்தொடர்பு கேபிள்கள் திருடப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக Gerik மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் Abdul Samad Othman தெரிவித்தார்.

இரவு மணி 11.38 அளவில் Pengkalan Hulu மாவட்ட போலீஸ் காவல் தலைமையகத்தின் ரோந்து வாகனப் பிரிவின் உறுப்பினர்கள், தாமான் 1 மலேசியா சந்திப்பில் Triton நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு உள்ளூர் ஆடவர்களை கண்டுபிடித்து, அவர்களைத் துரத்தினர்.

அப்போது ​​சந்தேக நபர்களில் ஒருவர் வெட்டும் கருவிகள், ஆணி மற்றும் கேபிள்களை போலீஸ் வாகனத்தை நோக்கி வீசினார்.

நள்ளிரவு மணி 12.30 அளவில் சந்தேக நபர் ஓட்டிச் சென்ற Triton வாகனம், kampung Parit Panjangகில் உள்ள ஒரு வீட்டை மோதிய பின்னர் கவிழ்ந்தது.

எனினும் அவ்வீட்டில் இருந்த , தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டின் உரிமையாளருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

சந்தேக நபர் பயன்படுத்திய வாகனம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அந்த வாகனத்தில் 20 சுருள் கேபிள்கள் ஒரு கைதொலைபேசி , மூன்று கேபிள் கட்டர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு சந்தேக நபர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்துல் சமாட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!