Latestமலேசியா

பாலிங்கில் பேரன் கத்தியால் குத்தியதால் பாட்டி பலி; கொள்ளு பாட்டி படுகாயம்

பாலிங், கெடா, டிசம்பர் 17 – கெடா பாலிங் மாவட்டத்தில் அமைந்திருக்கும், குவாலா கெத்தில் Kampung Baru Bakai பகுதியிலுள்ள வீடொன்றில், பேரன் ஒருவன் தனது சொந்த பாட்டியை கத்தியால் குத்தி உயிரிழக்கச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இந்தக் கடுமையான தாக்குதலில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி உயிரிழந்ததுடன் அவரின் 80 வயது தாயார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக பாலிங் மாவட்ட காவல்துறை தலைவர் Brandon Richard Joe தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் முதுகுப் பகுதியில் குத்துக் காயங்கள் காணப்பட்டதாகவும், காயமடைந்த மூதாட்டியின் கழுத்தின் பின்புறத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.

காயமடைந்தவர் கூலீம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், உயிரிழந்தவரின் உடல் அலோர் ஸ்டார் மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரைத் தடுப்பு காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!