Latestமலேசியா

பினாங்கில் பெட்டஸ் பூங்கா, ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாலமாக நடைபெற்றது

ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 3 – பினாங்கில் பெட்டஸ் பார்க் பூங்காவிலுள்ள ( Fettes Park) ஸ்ரீ சத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் Fettes பூங்கா மற்றும் நீர்வீழ்ச்சி பகுதியைச் சுற்றி இரத ஊர்வலமும் நடைபெற்றது.

இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் கோவிலில் விளக்கு அலங்காரங்களுடன், காளைகளால் இழுக்கப்பட்ட தேருடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றதாக ஆலயத் தலைவர் ராஜா கணேசன் தெரிவித்தார்.

பினாங்கு இந்து அப்பணி வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலுக்கு 10,000 ரிங்கிட் கிடைத்திருந்தாலும் , பக்தர்களின் ஆதரவோடு விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக நடைபெற்றதாக அவர் கூறினார்.

துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ (jagdeep Sing Deo) , பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மூன்று ஆணையர்களான டத்தோ கிருஷ்ணன், டத்தோ அசோக் மற்றும் குமரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பாடாங் செராயிலுள்ள விக்டோரியா தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக 20 கட்டு A4 பேப்பர் மற்றும் B5 பிரிண்டிங் பேப்பர்களையும் ஆலய நிர்வாகம் அன்பளிப்பு செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!