Latestமலேசியா

பினாங்கில் வேலை வாய்ப்பு முகாம்

பினாங்கு – ஜூன் 12 – வருகின்ற ஜூன் 14ஆம் தேதி, சுங்கை டுவா ‘லோட்டஸில்’, காலை மணி 9 முதல் மதியம் 3 மணி வரை, பத்து உபான் மாநில சட்டமன்றமும், பினாங்கு ‘செக்ஸோவும்’ இணைந்து, 19 நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில் துறைகள் கொண்ட வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தவுள்ளது.

இந்நிகழ்வில், உற்பத்தித்துறை, உணவு சேவைத்துறை, விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் வங்கி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 1,516 வேலை இடங்கள் பினாங்கு மாநிலத்தில் காலியாக உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை நடவிருக்கின்ற இந்த வேலை வாய்ப்பு நிகழ்வில், ஃபிளேக்ஸ் (Flex), அம்பு நிறுவனம் (Ambu Sdn. Bhd), சாம் இன்ஜினியரிங் நிறுவனம் (SAM Engineering & Equipment (M) Berhad), பினாங்கு ‘மரியோட்’ தங்கும் விடுதி (Penang Marriott Hotel)
மற்றும் ‘ஏ.எஸ்.ஈ எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம் ASE Electronics (M) Sdn. Bhd. போன்ற பினாங்கு மாநிலத்தின் மிக பெரிய நிறுவனங்களும் கலந்துக் கொள்ளவிருப்பதாக பத்து உபான் மாநில சட்டமன்ற உறுப்பினர் YB குமரேசன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டில், பினாங்கின் வேலையின்மை விகிதம் சுமார் 2.2 விழுக்காடாக பதிவாகியுள்ளது என்றும் இத்தகைய வேலை வாய்ப்பு முகாம் இதற்கான தீர்வாக அமையுமென்றும் மேலும் அவர் கருத்துரைத்துள்ளார்.

மேலும் இது வெறும் வேலை தேடும் அரங்கம் மட்டுமல்ல மாறாக நியாயமான, வளமான மற்றும் மக்கள் மீது அக்கறை கொண்ட மடானி அரசாங்கத்தின் பிரதிபலிப்பு என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், வேலை தேடி வரும் இளம் பட்டதாரிகளும் பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, வளமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!