
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-26-பினாங்கு, கெலுகோரில் 15 வயது சிறுமி ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பின் 10-ஆவது மாடியிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டு ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவர் தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
எனவே, பொது மக்கள் யூகிப்பதையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



