
செபராங் ஜெயா, டிசம்பர்-12 – பினாங்கு, செபராங் ஜெயாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்று விட்டு, 4 நாட்களாக உடலை அடுக்குமாடி வீட்டிலேயே வைத்திருந்த கணவர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
வேலையில்லாத 28 வயது அந்நபரின் வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்தனர்.
அங்கு 44 வயது மாது, கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
உடலை மீட்ட போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சந்தேக நபர் பழையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
5 பிள்ளைகளுக்குத் தாயான அம்மாது, முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு சுமார் மூன்றாண்டுகளுக்கு முன் கொலையாளியை மறுமணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.



