
வாஷிங்டன், மார்ச்-30 – அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி வீரர் ஒருவர், விண்வெளியில் காப்பி பிரியர்களுக்காக ஒரு புதுமையானத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது விண்வெளி விரர்கள் இனி உறிஞ்சிச் குழாய் (straw) அல்லது பைகளை நம்பாமல் காலை காப்பியை அருந்த வகை செய்யும் ஒரு கிண்ணத்தை டான் பெட்டிட் (Don Pettit) உருவாக்கியுள்ளார்.
அனைத்துலக விண்வெளி நிலையமான ISS-சில் உள்ள migrogravity எனப்படும் நுண் ஈர்ப்பு விசையானது, பாரம்பரிய குடிக்கும் முறைகளை சாத்தியமற்றதாக்கி விடுகிறது.
இதனால் அனைத்து புலன்களையும் உள்ளடக்கிய ஒரு காப்பி அனுபவத்துக்காக பெட்டிட் ஏங்கினார்.
அச்சவாலுக்குத் தீர்வுக் காண எண்ணியவர், கேப்பிலரி கிண்ணத்தை (capillary cup) வடிவமைத்துள்ளார்.
இது, மேற்பரப்பு அழுத்தம் மற்றும் கேபிலரி செயல்பாட்டைப் பயன்படுத்தி திரவங்கள் உதடுகளுக்கு இயற்கையாகப் பாய உதவும் ஒரு பாத்திரமாகும்.
X தளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
அதில் மிதக்கும் வெள்ளை கோப்பையை பருகுவதன் மூலம் பெட்டிட் தனது புதுமையை வெளிப்படுத்தினார்.
“காலையில் ஒரு மொடக்கு ஓ’ஜோ காப்பி குடிப்பது; அதுவும் பூஜ்ய ஈர்ப்பு (zero gravity) கோப்பையை விட சிறந்த அனுபவம் வேறு எதுவும் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.
சீல் செய்யப்பட்ட பைகளிலிருந்து straw வழியாக உட்கொள்ளப்படும் வழக்கமான விண்வெளி காபியைப் போலல்லாமல், விண்வெளி வீரர்கள் தங்கள் பானத்தின் நறுமணத்தை அனுபவிக்க இந்த கேபிலரி கோப்பை வாய்ப்பு வழங்குகிறது; காப்பி குடிக்கும் ‘சடங்கின்’ முக்கிய அங்கமே அதன் நறுமணம் தானே…
தனது பதிவைப் பார்த்து ஒரு பயனர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பெட்டிட், இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
இந்த பூஜ்ஜியம் ஈர்ப்பு கோப்பையின் மூலம் காப்பியின் வாசனையை நீங்கள் 70 சதவீதம் உணர முடியும்; இது ஒரு பையில் இருந்து straw வழியாக பருகும்போது நீங்கள் செய்ய முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
Rochester தொழில்நுட்பக் கழகத்தால் சிறப்பிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி வீரர்களுக்கு அன்றாட அனுபவங்களை மிகவும் இயற்கையானதாக மாற்றுவதில் ஒரு படி முன்னேறியுள்ளது.
பெட்டிட்டின் வடிவமைப்பு, நுண் ஈர்ப்பு விசையில் திரவ இயக்கவியல் பற்றிய தொடர் ஆராய்ச்சிக்கு வழி வகுத்துள்ளதோடு, எதிர்கால விண்வெளி பயணிகளுக்கு தெம்பை அளித்துள்ளது.