பினாங்கு, ஜனவரி 31 – தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, லைனர்ஸ் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுவினர் பினாங்கு பாலதாண்டயுதபாணி கோவில், ஜாலான் உத்தமாவில் ஏழாவது ஆண்டாக தண்ணீர் பந்தலை அமைக்கவுள்ளனர். LINERZ MOTORSPORTS மலேசியா விளையாட்டு துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் போல இவ்வருடமும் பந்தலில் பக்தர்களுக்குப் பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் விஜயமாணிக்கம் தெரிவித்தார்.
தைப்பூசத்திற்கு முன்தினம் பிப்ரவரி 10 மற்றும் தைப்பூச தினமான பிப்ரவரி 11 ஆகிய நாட்களில் பக்தர்களுக்குப் பானங்கள் மற்றும் உணவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பந்தலுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களுக்குச் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளதாகவும், திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது பந்தல் வசதியினைப் பயன்படுத்தி பயனடையலாம் என்றும் இக்குழுவினர் தெரிவித்தனர்.