
கோலாலம்பூர், ஜனவரி-18-PPP எனப்படும் மக்கள் முற்போக்குக் கட்சி, மீண்டும் தேசிய முன்னணியிலேயே இணைந்துள்ளதாக, டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக PPP சேர்த்துக் கொள்ளப்பட்டதை, சங்கங்களின் பதிவிலாகாவான ROS கடந்த நவம்பர் 25-ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
PPP ‘தாய் வீட்டுக்கே’ திரும்பியுள்ளது கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் என, கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற PPP ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது BN தலைவருமான சாஹிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பாரிசானில் நீண்ட கால உறுப்பினராக இருந்த PPP, 2018 பொதுத் தேர்தலில் BN தோல்வியடைந்ததும் கூட்டணியை விட்டு வெளியேறியது.
பின்னர் உட்பூசல்களால் 2019-ல் கட்சியின் பதிவு இரத்துச் செய்யப்பட்டது.
நிலைமை சுமூகமாகி, 2023-ல் மீண்டும் பதிவு செய்யப்பட்டு, இப்போது BN-ல் மீண்டும் இணைந்துள்ளது.



