
கோலாலம்பூர், அக்டோபர் 7 –
சமீபத்தில் வைரலான இரவு விருந்து தொடர்பான சர்ச்சையை முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் தெரிவித்த கண்டனத்தை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு (MOTAC) முழு பொறுப்புடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் மக்களிடையே ஏற்பட்ட குழப்பம் மற்றும் வருத்தத்திற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொண்ட MOTAC இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கிணங்க நடைபெறும் என்று உறுதி பூண்டுள்ளது.
மேலும், பிரதமரின் விமர்சனத்துக்கும் தொடர் ஆதரவுக்கும் அமைச்சு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
MOTAC, இதுபோன்ற தவறுகள் இனி மீண்டும் நிகழாதபடி, தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மையை வலுப்படுத்தி, மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்வதில் மேலும் மேம்பாடு செய்யுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.