
கோலாலம்பூர், நவம்பர் 11 – கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தலைநகரிலுள்ள ஓட்டலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தைவான் சமூக ஊடக பிரபலம் ‘Hsieh Yun Hsi க்கும், மலேசிய ரேப் பாடகர் பெயர் ‘Namewee’ க்கும் “சிறப்பு உறவு” இருந்ததென்று கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ ஃபாடில் மார்சூஸ் தெரிவித்தார்.
‘Namewee’ யின் தடுப்பு காவல் வருகின்ற 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு வழக்கு ஆவணங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அவ்விருவரும் வெளிநாட்டிலிருந்து ஒன்றாக வந்து, அதே ஓட்டலில் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவுகளின் முழு அறிக்கைகள் இன்னும் பெறப்படாத நிலையில், அவை கிடைத்தவுடன் விசாரணை முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.



