
புக்கிட் பிந்தாங், ஜனவரி-21 – Avision Media Agency முதன்முறையாக நடத்திய 2025 Socialpreneur விருதளிப்பு விழா ஜனவரி18-ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தியேறியது.
டிக் டோக் சமூக ஊடக முனைவர்களை அங்கீகரிக்கும் நோக்கில் கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள Signature ஹோட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணையமைச்சர் தான் ஸ்ரீ எம். கேவியஸ் பங்கேற்றார்.
சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் டத்தோ சண்முகன், Linchon பல்கலைக்கழக கல்லூரி தலைமைச் செயல் அதிகாரி டத்தோ Dr Mohd Yusoff Bin A. Bakar உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
16 பிரிவுகளில் Content Creator எனும் உள்ளடக்க உருவாக்குநர் விருதுகள் வழங்கப்பட்ட வேளை, Avision Media Agency நிறுவனத்தின் கீழுள்ள 700 உள்ளடக்க உருவாக்குநர்களை அங்கீகரிக்கும் பொருட்டு தனியாக 8 விருதுகளும் வழங்கப்பட்டன.
MINDAPPZ நிறுவனத்திற்கு 2025-ஆம் ஆண்டுக்கான SOCIALPRENEURS விருதும், சமூகப் பங்களிப்பில் சிறந்த வணிக முத்திரைக்கான விருது PANCHA PRODUCT SDN BHD-க்கும், வளர்ந்து வரும் சமூக ஊடக நட்சத்திரம் விருது கே. கார்த்திக் கிருஷ்ணனுக்கும், சமூகக் கல்விச் சுடர் விருது Dr புனிதன் ஷான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
நாட்டின் முதல் நிலை தமிழ் மின்னியல் ஊடகமான வணக்கம் மலேசியாவின் சமூகப் பங்களிப்புக்காக ‘அறமுரசு ஊடக விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விருதினை, வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி பெற்றுக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் சமூக முன்னேற்றத்திற்கு பங்களித்த தொழில்முனைவோர், பயிற்சியாளர்கள், ஊடகப் பிரபலங்கள் ஆகியோரை கைரவிருப்பதே விருது விழாவின் நோக்கம் என, Avision Media தலைமை செயலதிகாரி சுரேஷ் தனசேகரன் கூறினார்.
விருதுப் பெற்றவர்கள், தங்களையும் அழைத்து அங்கீகரித்த Avision Media Agency-க்கு நன்றி தெரிவித்ததோடு, மென்மேலும் ஊக்கத்தோடு செயலாற்ற உறுதிப் பூண்டிருப்பதாக வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.
இந்த விழா, உள்ளூர் சமூக ஊடக முனைவர்களின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.



