பிரான்சில் அண்டை வீட்டிற்குள் நுழைந்த பூனை; உரிமையாளருக்கு RM6,700 அபராதம்

பிரான்ஸ், நவம்பர் 4 –
பிரான்சில், பெண் ஒருவரின் செல்லப் பூனை ஒன்று, அண்டை வீட்டாரின் தோட்டத்துக்குள் நுழைந்ததால், அவருக்கு மலேசிய பண மதிப்பில் 6,700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
‘ரெமி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அப்பூனை, அண்டை வீட்டாரின் தோட்டத்தில் சிறுநீரையும் மலத்தையும் கழித்து விட்டு, சுவர்களில் அழுக்கு படிந்த கால் தடங்களைப் பதித்ததென்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரியில் வெளியான தீர்ப்பின் படி, அப்பூனையின் உரிமையாளர் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகளை ஈடுகட்ட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. மேலும், பூனை மீண்டும் அண்டை வீட்டுக்குள் சென்றால் ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சமீபத்தில் அப்பூனை மீண்டும் அதே செயல்களைச் செய்ததன் விளைவால் எழுந்த குற்றச்சாட்டை முன்னிட்டு, வருகின்ற டிசம்பர் மாதம் அந்த உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத்தைச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுமென்று அறியப்படுகின்றது.
இந்நிலையில், இந்த வழக்கு தனது மனநலத்தை வெகுவாக பாதித்துள்ளது என்றும்’ரெமி’ தற்போது வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அந்த உரிமையாளர் குறிப்பிட்டிருந்ததார்.



