Latestமலேசியா

பிரான்ஸ் கடல் ஆழத்தில், 16 ஆம் நூற்றாண்டின் வணிகக் கப்பல் பாகங்கள்; தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பிரான்ஸ், ஜூன் 16 – தெற்கு பிரான்சிலிருந்து 2.5 கிலோமீட்டருக்கும் அதிகமான நீருக்கடியில், 16 ஆம் நூற்றாண்டின் விபத்துக்குள்ளான வணிகக் கப்பலின் பாகங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்,

பிரெஞ்சு பிராந்திய கடலில் இதுவரை கண்டறியாத மிக ஆழமான கப்பல் விபத்து இதுவென்று பிரான்ஸ் கலாச்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் நிபுணர்கள் சுமார் 100 தகடுகள், இரண்டு கொப்பரைகள், நங்கூரம் மற்றும் பீரங்கி குவியல்களை அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்சின் ஆழ்கடல்களை ஆராய்வதற்கு நீர்மூழ்கிக் கப்பல் ரோபோவை பயன்படுத்தி, மேற்பரப்பிலுள்ள ஒரு படகுடன் இணைத்து வழிநடத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!