
கோலாலம்பூர், ஏப்ரல்-23, பிரபல தென்னிந்திய உணவகமான ‘தள்ளு வண்டி’ ஏப்ரல் 14 சித்திரைப் புத்தாண்டு அன்று, கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஸ்கோர்ட்ஸ் வளாகத்தில் திறப்பு விழா கண்டது.
அதனை ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இதனிடையே, நேற்று மீண்டும் அந்த உணவகத்திற்கு வருகை புரிந்து டத்தோ சரவணன், ஊடக நண்பர்களுக்கு விருந்தளித்தார்.
துபாயில் இயங்கி வரும் ‘தள்ளு வண்டியின்’ கிளை உணவகமான இதில், தென்னகப் பாரம்பரியத்தின் சுவைக் குன்றா உணவுகள் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகின்றன.
லிட்டில் இந்தியாவில் புதியக் கிளை திறக்கப்பட்டிருப்பது குறித்து உணவக உரிமையாளர் ஷர்மிளா ஆனந்த் வணக்கம் மலேசியாவிடம் கருத்துரைத்தார்.
F&B எனப்படும் உணவு மற்றும் பானங்கள் துறையில் இப்போதெல்லாம் இவர்களைப் போன்ற இளையோர் அதிகளவில் ஈடுபடுவது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
எனவே, பொது மக்கள் திரளாக வந்து இந்த ‘தள்ளு வண்டி’ உணவகத்துக்கு வற்றாத ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்