
கோலாலாம்பூர், டிசம்பர் 26-மாமன்னன் ராஜா ராஜா சோழனுக்கு மலேசியா மாபெரும் விழா எடுக்கிறது.
பி.வி. புரொடக்ஷன் ஏற்பாட்டில்,வரும் ஜனவரி 25-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பிரிக்ஃபீல்ட்ஸ், Temple of Fine Arts, ஷாந்தானந்த் ஆடிட்டோரியம் வளாகத்தில் இவ்விழா வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழர்களுக்கு, ராஜ ராஜ சோழனின் பாரம்பரியத்தையும் பெருமைகளையும் பறைசாற்றுவதே விழாவின் நோக்கம் என, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ராமன் கூறினார்.
இந்தியாவிலிருந்து இருவரும் மலேசியாவிலிருந்து ஒருவருமாக, மூன்று அறிஞர்களின் பேருரையும் இதில் இடம்பெறவுள்ளது.
கடாரம் கண்ட ராஜேந்திர சோழன், தஞ்சாவூர் பெரிய கோவில் சிறப்புகள், மாமன்னன் ராஜா ராஜா சோழன் வரலாற்றுப் பெருமைகள். ஆகியத் தலைப்புகளின் பேருரை நிகழும் என்றார் அவர்.
சுமார் 600 பேருக்கு அமரும் வசதி உள்ள இவ்விழாவிற்கான டிக்கெட்டுகள் RM100 மற்றும் RM250 என விற்பனை செய்யப்படுகின்றன.
டிக்கெட் வாங்க ஆர்வமுள்ளோர், பின்வரும்/ திரையில் காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.



