
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-21 – Ashvin Exclusive Fashion மற்றும் DRNIRR Premium Outlet எனும் 2 வணிகத் தளங்கள் அண்மையில் கோலாலாம்பூர், Brickfields, லிட்டில் இந்தியா Sentral Suites முதல் மாடியில் திறப்பு விழா கண்டன.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமைத் தாங்கி அக்கடைகளை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த நிலையில் டத்தோ சிவகுமாரும் முக்கியப் பிரமுகராக கலந்துகொண்டார்.
1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அவ்விழாவுக்கு, samba rock பாடகர் Darkky -யின் இசைப் படைப்பு மேலும் மெருகூட்டியது.
வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் குலுக்குச் சீட்டில் மோட்டார் சைக்கிள், சுற்றுலா பேக்கேஜ்கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற கவர்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டன.
Ashvin Exclusive Fashion என்பது 2015-ல் Colors of India விற்பனைச் சந்தையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒரு வணிகமாகும்.
உரிமையாளர்கள் தவசீலன் – குணம்வள்ளி தம்பதி ஆகியோரின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளாக, விதவிதமான புடவைகள், குர்திகள், குர்தாக்கள், ஜிப்பாக்கள் போன்றவற்றை விற்கும் குடும்பத் தொழிலாக இது நடத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம், DRNIRR Premium Outlet என்பது 2023-ஆம் ஆண்டு – Baskkaran & Dr.Nireshah மற்றும் Uthayasoorian & Pau Choo தம்பதிகள் தொடங்கிய வணிகமாகும்..
மலேசியாவின் முதல் Juttis சில்லறை விற்பனைக் கடை இதுவென்பது சிறப்பம்சம்.
உள்ளூர் சந்தைகள் மற்றும் விற்பனை விழாக்களில் கூடாரங்கள் அமைத்து தொடங்கிய இவ்விரண்டு வணிகங்களும் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பது இந்தியர்களின் வணிக வளர்ச்சியை பறைசாற்றுகிறது.
இதனிடையே, இதில பல சவால்கள் மற்றும் போட்டிகளை எதிர்கொண்ட போதிலும், அவற்றை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளன இவ்விரு வணிகங்களும்.
காலப்போக்கில் இவர்களின் வர்த்தக முத்திரையை தொடர்ந்து நம்பும் விசுவாசமான மற்றும் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
இதனிடையே, லிட்டில் இந்தியாவின் மையப்பகுதியில் முதல் கிளையை வெற்றிகரமாகத் திறந்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.