
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை கட்டிக் காப்பதில் பிற அரசியல் கட்சிகளோடு, கலந்து பேசாவிடில், ம.இ.கா-விற்கு வேறு என்ன தேர்வு இருக்கிறது என கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர்களின் நலனுக்காக, பலகாலமாக, போராடிவரும் கட்சி என்ற அடிப்படையில், அரசியல் அணுகுமுறையில் வெளிப்படைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் வியூகங்களை கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் கூறினார்.
அந்த வகையில், அம்னோ, பி.கே.ஆர், டி.ஏ.பி, ம.சீ.சா, பாஸ், பெர்சத்து அல்லது வேறு கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்துவதிலோ அல்லது ஒத்துழைப்பதிலே தவறு ஏதும் இல்லை. நாட்டின் வளர்ச்சி நீரோட்டத்தில் இந்தியர்கள் தொடர்ந்து பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய அது அவசியம் என்றார் அவர்.
அந்த வகையில், குறுகிய மனப்பான்மையோடு, இவ்விவகாரத்தை பார்க்காமல் ஆக்கரமான பிற கட்சிகளுடனான ஒத்துழைப்பை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார் முருகையா.
அவ்வகையில், கட்சி பின்ணனி மற்றும் சித்தாந்தத்திற்கு அப்பார்ப்பட்டு யாருடனும் பேச்சு நடத்த ம.இ.கா தயார் என முருகையா கூறினார்.